கடும் வெயில் காரணத்தால் போர்வைத் தொழில் பாதிப்படைவதாக ஈரோடு மாவட்டம், சென்னிமலைப் பகுதி விசைத்தறி உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் குளிர்காலங்களில் விற்பனையாகும் போர்வைத் தொழில் தற்போது தேக்கம் அடைந்து வருகிறது.
இதனால் விசைத்தறி தொழில் பாதிப்படைவதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
மேலும் விசைத்தறி தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.