பாகிஸ்தான் இறையாண்மைமிக்க தேசம் என காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் ஐயர் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏறப்டுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில், பாகிஸ்தான் மதிப்புக்குரிய தேசம். அவர்களிடமும் அணு ஆயுதம் உள்ளது. பித்துப்பிடித்த நபர் ஒருவர் பாகிஸ்தானின் லாகூர் நகரில் அணுகுண்டை வெடிக்கச் செய்தால், அதன் தாக்கம் பஞ்சாப் மாநிலம் வரை எதிரொலிக்கும் என தெரிவித்துள்ளார்.
மணிசங்கர் ஐயரின் இந்தக் கருத்துக்கு கண்டனம் தெரிவித்த மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், அவரது இந்தக் கருத்து காங்கிரஸின் சித்தாந்தத்தை வெளிப்படுத்துவதாக விமர்சித்துள்ளார்.