ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ipad-க்கான விளம்பரம் சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
புத்தகங்கள், கேமரா, பியானோ, கிதார், தொலைக்காட்சி போன்ற சாதனங்களை நசுக்கிவிட்டு, அவை அனைத்தையும் உள்ளடக்கி புதிய ipad ப்ரோ உருவாக்கப்பட்டுள்ளதாக உருவகமாகக் கூறும் வகையில், இந்த விளம்பரம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த விளம்பரம் மனித படைப்பாற்றலினால் உருவான கண்டுபிடிப்புகளை அழிக்கும் வகையில் உள்ளதாக சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.