வைகை அணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வைகை அணையில் இருந்து மதுரை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களுக்கு மூன்று கட்டங்களாக தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டு இருந்தது.
முதற்கட்டமாக, ராமநாதபுரத்திற்கு வைகை அணையில் இருந்து வினாடிக்கு மூன்று ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், அணையின் மதகுகளில் இருந்து தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்கிறது.
இதனால், “தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் வைகை ஆற்றில் இறங்கோ அல்லது குளிக்கவோ வேண்டாம்” என்று பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.