அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கூலி தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
ஆமணக்கந்தோண்டி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியை காதலிப்பதாகவும், திருமணம் செய்துகொள்வதாகவும் ஆசை வார்த்தைக் கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதில் அந்த சிறுமி கர்ப்பமானதால் சிறுமியின் தாயார் காவல்நிலையத்தில் புகாரளித்தார். இதனைடுத்து மணிகண்டனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.