திருவள்ளூர் அருகே சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரி, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக மீஞ்சூர் முதல் வள்ளூர் வரை உள்ள சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது.
சுமார் 17 கோடி ரூபாயில் பொன்னேரி – திருவெற்றியூர் சாலை சீரமைக்கப்படும் என கூறப்பட்ட நிலையிலும், இதுவரை மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுக்கள் குற்றம்சாட்டினர். சாலை மறியல் காரணமாக சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.