கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு தீ வைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சிதம்பரத்தைச் சேர்ந்த கார்த்தி என்பவர், தனியார் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் வழக்கம்போல் தனது வீட்டின் அருகே வாகனங்களை நிறுத்தி வைத்துவிட்டு உறங்கியுள்ளார்.
அப்போது மர்ம நபர்கள் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்ததில், சரக்கு வாகனம் மற்றும் இருசக்கர வாகனம் தீயில் எரிந்து சாம்பலானது.
மேலும் இரண்டு சொகுசு கார்களின் முன்புறமும் தீயில் எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சிதம்பரம் நகர போலீசார், மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.