புதுச்சேரியில் தனியார் சுற்றுலா படகை மர்ம நபர்கள் தீயிட்டு கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வம்பாகீரப்பாளையம் பகுதியை சேர்ந்த நிலவழகன் என்ற இளைஞர் 7 லட்சம் ரூபாய் செலவில் சுற்றுலா படகு ஒன்றை தயார் செய்து, அரசின் அனுமதிக்காக காத்திருந்தார்.
இந்நிலையில், பழைய துறைமுக முகத்துவார பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது படகை, மர்ம நபர்கள் தீயிட்டு கொளுத்தியுள்ளனர். இதில், படகு முழுவதும் தீயில் எரிந்து சேதமானது.
இது தொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.