10-ம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத் தேர்வு ஜூலை 2 -ம் தேதி முதல் 8-ம் தேதி வரை நடைபெறும் என என அரசுத் தேர்வுகள் துறை இயக்குனரகம் அறிவித்துள்ளது.
2023 – 2024-ம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதி தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் தேர்விற்கு வராத மாணவர்களுக்கான துணைத் தேர்வுகள் குறித்து அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளார்.
அதில் 2023 – 2024-ம் கல்வியாண்டுக்கான 10-ம் வகுப்பு துணைத்தேர்வுகள், ஜூலை 2-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிவியல் செய்முறைத் தேர்வு எழுத உள்ள நேரடி தனித்தேர்வர்கள், மே 16 முதல் 24-ம் தேதி வரையில் மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு சென்று 125 ரூபாய் கட்டணமாக செலுத்தி பெயர்களை பதிவு செய்து ஒப்புகை சீட்டு பெற்றுக் கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
2023 – 2024ம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்து தேர்ச்சி பெறாத, வருகை புரியாத மாணவர்கள் சிறப்பு கட்டணம் 500 ரூபாய் செலுத்த தேவையில்லை என்றும், இதுகுறித்த விவரங்களையும், தேர்வுக்கால அட்டவணையையும் www.dge.tn.gov.in என்ற வலைதளத்தில் தெரிந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.