பாஜகவின் சாதாரண நிர்வாகியான தன்னை எதிர்த்துப் போட்டியிட தைரியமில்லாத ராகுல்காந்தி, பிரதமரை விவாதத்திற்கு அழைப்பது வேடிக்கையாக உள்ளதாக அமேதி தொகுதி பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானி விமர்சித்துள்ளார்.
பிரதமர் மோடியுடன் சமமாக அமர்ந்து விவாதிப்பதற்கு, ராகுல்காந்தி இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளரா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால் வரும் ஜூன் 4-ம் தேதிக்கு முன்னதாகவே சிறைக்கு செல்வது உறுதி என்றும், ஆயுள் தண்டனை பெற்றபின் சிறையில் எவ்வாறு காலம் கடத்துவது என்பது குறித்து தான் அவர் கவலைப்பட வேண்டுமென்றும், ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.