காணாமல் போன காங்கிரஸ் : இந்தூரில் அசுர பலத்தில் பாஜக!
Sep 12, 2026, 10:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காணாமல் போன காங்கிரஸ் : இந்தூரில் அசுர பலத்தில் பாஜக!

Murugesan M by Murugesan M
May 12, 2024, 11:38 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

 நாடாளுமன்ற தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரங்களுக்கு நடுவிலும்  சுவாரஸ்யமான செய்திகளும் வருகின்றன. அப்படி ஒரு சுவாரஸ்யமான செய்தி தான்  இது. பாஜகவுக்கும் நோட்டாவுக்கும் இடையேயான போட்டியாக இந்தூர் தேர்தல் களம் மாறியிருக்கிறது. என்னதான் நடக்கிறது  அந்த தொகுதியில் என்பது சற்று விரிவாக பார்க்கலாம்.

மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. இதில், மத்திய பிரதேச மாநிலத்தில் 4 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஏப்ரல் 19, ஏப்ரல் 26  மற்றும் மே 7 ஆம் தேதிகளில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்த நிலையில் , மொத்தமுள்ள 29 தொகுதிகளில் , மீதமுள்ள தொகுதிகளுக்கு வரும் மே 13ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

இதில் மத்திய பிரதேசத்தின் வர்த்தக தலைநகர் என்று சொல்லப்படும் இந்தூர் தொகுதி மிக முக்கியமான தொகுதியாகும் . 8 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய இந்தூர் தொகுதி கடந்த 35 ஆண்டுகளாக பாஜக வசம் உள்ளது. மக்களவையின் சபாநாயகராக இருந்த பாஜகவின் சுமித்ரா மகாஜன் இங்கே 8 முறை தொடர்ந்து வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.

2019 ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில், பாஜகவின் ஷங்கர் லால்வானி 5.48 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸின் பங்கஜ் சங்வியைத்  தோற்கடித்தார்.  25.13 லட்சம் வாக்காளர்களைக் கொண்ட இந்தூரில் இந்த முறையும் பாஜக சார்பில்  லால்வானி போட்டியிடுகிறார்.

திடீர் திருப்பமாக, வேட்புமனுவை திரும்ப பெறுவதற்கான கடைசி நாளான ஏப்ரல் 29ஆம் தேதி, காங்கிரஸ் வேட்பாளர் அக்ஷய் காந்தி பாம் போட்டியில் இருந்து விலகி, பாஜகவில் சேர்ந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார் .

இது காங்கிரசுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. என்ன செய்வதென்று தெரியாத காங்கிரஸ் , வாக்குப்பதிவின் போது நோட்டாவுக்கு வாக்களிக்குமாறு தன் பிரச்சாரத்தைச் செய்து வருகிறது.

நோட்டாவுக்கு வாக்களிக்க ஒட்டிய விளம்பரத்தை பாஜக கவுன்சிலர் சந்தியா யாதவ்  கிழித்ததாக அவர் மீது காங்கிரஸ் புகார் கொடுத்துள்ளது. ஆனால் அவரோ , ‘மனசாட்சியுள்ள குடிமகனாக இருக்க வேண்டிய கடமையைத் தாம்  நிறைவேற்றியதாகவும், நோட்டாவை விளம்பரப்படுத்தும் போஸ்டரை ஆட்டோ ரிக்ஷாவில் இருந்து அகற்றியதாகவும் தெரிவித்தார் .

தேர்தலில், நோட்டாவுக்கு வாக்களிக்க சொல்வது, ஜனநாயக குற்றம் என்று கூறிய  மத்திய பிரதேச பாஜக தலைவர் வி டி சர்மா,  ‘25.13 லட்சம் வாக்காளர்கள் உள்ள இந்தூரில் இந்த முறை பாஜக  8 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மாநகராட்சி மற்றும் சட்டசபை தேர்தல்களில் இந்தூர் வாக்காளர்கள் பாஜகவுக்கு மிகப்பெரிய வெற்றியை தந்துள்ள நிலையில்,  ஊழல்வாதிகள் நோட்டாவுக்கு வாக்களியுங்கள் என்று சொல்கிறார்கள் என்றும், நீங்கள் தேச நலனுக்கு ஆதரவாக வாக்களியுங்கள் என்று பாஜகவும் பதிலுக்கு பிரச்சாரம் செய்து வருகிறது.

இந்திய தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக, இந்தூரில் காங்கிரஸ் வேட்பாளர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: bjpMadya Pradeshcongresssnoda
Share
Tweet
SendShare
Previous Post

அன்னையர் தினம் : அண்ணாமலை வாழ்த்து!

Next Post

பிரதமரை ராகுல் காந்தி விவாதத்திற்கு அழைப்பது வேடிக்கையாக உள்ளது : ஸ்மிருதி இரானி

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies