மதுரை வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாலைகளை வெள்ளநீர் சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் மூன்றாம் பூர்வீக பாசன தேவைக்காக, மதுரை வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.இதனையடுத்து வைகையாற்றுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்ததால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் மதுரையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்த நிலையில் வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இணைப்புச்சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.