திருவண்ணாமலை அருகே கார் விபத்தில் சிக்கிய அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் எ.வ.வே கம்பன், சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவின் மகனான எ.வ.வே.கம்பன், ஏந்தல் பைபாஸில் வேலூர் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது
திருவண்ணாமலை நோக்கி வந்த கார், பயங்கர வேகத்தில் மோதியதில், எ.வ.வே.கம்பனுக்கு லேசான காயமும், அவரது ஓட்டுநருக்கு பலத்த காயமும் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விபத்து நடந்த இடத்தில் போக்குவரத்து சிக்னல் இல்லாததால், அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.