கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் வலசை பாதை அடைக்கப்பட்டதால், ஊருக்குள் வலம் வரும் பாகுபலி யானையைக் கண்டு பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
தனது வழக்கமாக பாதை அடைக்கப்பட்டதையடுத்து, சமயபுரம் கிராமத்திலுள்ள விவசாய நிலங்களில் பாகுபலி யானை நடமாடி வருகிறது.
பாகுபலி யானை சாலையைக் கடந்து நெல்லி மலை காட்டிற்குள் செல்லும் வரை வனத்துறையினர் வாகனங்களை நிறுத்தி பாதுகாப்பு அளித்தனர்.