பருப்பு வகைகளுக்கு வரி குறைப்பில்லை...இந்தியா - அமெரிக்கா டீல் : சத்தமே இல்லாமல் திருத்திய வெள்ளை மாளிகை!
Sep 2, 2026, 04:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பருப்பு வகைகளுக்கு வரி குறைப்பில்லை…இந்தியா – அமெரிக்கா டீல் : சத்தமே இல்லாமல் திருத்திய வெள்ளை மாளிகை!

Manikandan by Manikandan
Feb 12, 2026, 07:10 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களை சத்தமே இல்லாமல் மாற்றியிருக்கிறது வெள்ளை மாளிகை. அதற்கான காரணம் என்ன?

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே உருவான வரலாற்று சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தத்தின் விவரங்களை வெளியிட்ட ஒரே நாளில், வெள்ளை மாளிகை சில முக்கியமான மாற்றங்களை சத்தமே இல்லாமல் ரகசியமாக செய்திருப்பது தெரியவந்துள்ளது.

வெள்ளை மாளிகை முதலில் வெளியிட்ட அசல் அறிக்கையில், அமெரிக்காவின் எரிசக்தி மற்றும் தொழில்நுட்ப பொருட்களை 500 பில்லியன் டாலர் மதிப்பிற்கு கொள்முதல் செய்ய இந்தியா உறுதி அளித்துள்ளதாக அதாவது Committed என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருந்தது. ஆனால், தற்போது திருத்தப்பட்ட அறிக்கையில், இந்தியா வாங்க உத்தேசித்துள்ளது, அதாவது Intends என அந்த வார்த்தை மென்மையாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அமெரிக்கா உடனான ஒப்பந்தம் கட்டாய கொள்முதல் அல்ல என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இதேபோன்று இந்தியா இறக்குமதி செய்ய வேண்டிய பொருட்களின் பட்டியலில் இருந்து விவசாயம் அதாவது Agricultural என்ற வார்த்தையும் நீக்கப்பட்டுள்ளது.

மற்றொரு திருத்தம் வரி குறைப்பு பற்றியது. அதன்படி முந்தைய அறிக்கையில் அமெரிக்காவின் அனைத்து தொழில்துறை பொருட்கள், தானியங்கள், சிவப்பு சோளம், மரக் கொட்டைகள், புதிய மற்றும் பதப்படுத்தப்பட்ட பொருட்கள், சில பருப்பு வகைகள், சோயாபீன் எண்ணெய், ஒயின், மதுபானங்கள் மற்றும் பல்வேறு வகையான பொருட்கள் மீதான வரிகளை இந்தியா நீக்கும் அல்லது குறைக்கும் என்று கூறியது. தற்போது வெள்ளை மாளிகை திருத்தி வெளியிட்ட அறிக்கையில், சில பருப்பு வகைகள் என்பது மட்டும் நீக்கப்பட்டுள்ளன.

முந்தைய அறிக்கையில், இந்தியா தனது டிஜிட்டல் சேவை வரிகளை நீக்கும் என்று நேரடியாக குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது அந்த வாசகம் நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக டிஜிட்டல் வர்த்தக விதிகள் குறித்து இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தும் என்று திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

திருத்தப்பட்ட அறிக்கையில், சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டாலும், இந்தியா மீதான 18 சதவீத வரி குறைப்பு நடவடிக்கை தொடருகிறது. ரஷ்ய எண்ணெய் வாங்கியதற்காக விதிக்கப்பட்ட 25 சதவீத வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏற்கனவே நீக்கிய நிலையில், இடைக்கால வர்த்தக ஒப்பந்தமானது அடுத்த மாதம் அதிகாரப்பூர்வமாக கையெழுத்தாகும் எறு எதிர்பார்ப்படுகிறது.

Tags: usalcoholTrumpUS tariffWINEThe White House.AgriculturalPM ModiIndiabjpamerica
Share
Tweet
SendShare
Previous Post

முதல் படத்தின் சம்பளத்தில் பள்ளிக்கூடம் கட்டும் மோனலிசா!

Next Post

கனடா பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் பலி!

Related News

திருப்பதி ஏழுமலையான் கோயில் துணை நிர்வாக அதிகாரி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அன்றைய தினமே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் – பேரவையில் முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

முந்தைய ஆட்சியில் ஆசிரியர்கள், விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

ரூ 4,800 கோடி மதிப்பீட்டில் மீஞ்சூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

நேபாள வெள்ளத்தில் மாயமான தமிழர்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? – சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

இஸ்ரோ தனியார் மயமாக்கப்படவில்லை, தனியாரிடம் ஒப்பந்தம் மட்டுமே செய்துள்ளோம் – இஸ்ரோ தலைவர் நாராயணன் விளக்கம்!

மின் பயன்பாடு கணக்கெடுப்பில் தவறு ஏற்பட்டால் மேற்பார்வை பொறியாளர்கள் பொறுப்பேற்க வேண்டும் – மின்வாரியம் எச்சரிக்கை!

அடுத்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ‘கம் பேக்’ கொடுக்கும் – ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை

நேபாளத்தில் இருந்து மேலும் 5 பேர் சென்னை திரும்பினர் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

விமானப் படையின் முதல் பெண் துணைத் தளபதியாக சக்தி ஷர்மா நியமனம்!

விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு திட்டத்தில் தட்கல் முறையை ரத்து செய்யக்கோரிய வழக்கு – உயர் நீதிமன்றம் உத்தரவு!

வாக்கு எண்ணிக்கைக்கு ‘டோட்டலைசர்’ கருவி : உச்ச நீதிமன்றம் உத்தரவு!

உதகையில் உள்ள பள்ளி மைதானத்தை மாணவர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை தேவை – பாஜக எம்எல்ஏ போஜராஜன் வலியுறுத்தல்!

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க நடவடிக்கை – ஆதவ் அர்ஜுனா

சென்னையில் 11 இடங்களில் நவீன ஏசி பேருந்து நிறுத்தங்கள் – மாநகராட்சி ஆணையர் தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies