தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே அரசு தொடக்கப்பள்ளிக்கு 11 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சீர்வரிசையாக வழங்கப்பட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாதன்கிணறு கிராமத்தில் பழமையான ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் இங்கு பயின்ற முன்னாள் மாணவர்கள் பள்ளியை தத்தெடுத்து பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்தவகையில் 11 லட்சம் ரூபாய் மதிப்பில் பள்ளிக்குத் தேவையான சேர், டேபிள், கம்ப்யூட்டர் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்களை, முன்னாள் மாணவர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து சீர்வரிசையாக வழங்கியுள்ளனர்.