தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் முருகன் கோயிலில் கூட்ட நெரிசலின் காரணமாக சுமார் 5 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
உலகப் புகழ் பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், விடுமுறை தினத்தையொட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
கடலில் நீராடிய பக்தர்கள், சுமார் 5 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.