மதுரை வைகையாற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ள நீரில் ஆபத்தை உணராமல் சிறுவர்கள் குளித்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் மூன்றாம் பூர்வீக பாசன தேவைக்காக வைகை அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், வைகை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கில் ஆபத்தை உணராமல் சிறுவர்கள் குளித்து வருகின்றனர்.
அசம்பாவிதம் ஏற்படும் முன் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.