ஆந்திரா கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் பச்சை காய்களின் வரத்து 50 சதவீதம் வரை குறைவாக உள்ளது. பீன்ஸ் 1 கிலோ 200 ரூபாய், பூண்டு 1 கிலோ 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நாடு முழுவதும் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் கடந்த சில தினங்களாக பல்வேறு பகுதிகளில் வெப்பசலான மழை பெய்து வருகிறது.
இருந்த போதும் தென் மாவட்டங்களான ஆந்திரா கர்நாடகா மற்றும் தமிழகம் ஆகிய பகுதிகளில் காய்கறி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு பச்சை காய்கறிகள் வரத்து 50% வரை குறைந்துள்ளது.
வரத்து குறைவின் காரணமாக காய்கறிகளின் விலை வழக்கத்தை காட்டிலும் வெகுவாக அதிகரித்துள்ளது. வழக்கமாக 60 முதல் 70 வரை விற்கப்படும் பீன்ஸ் தற்போது விளைச்சல் குறைவு காரணமாக 200 ரூபாய் அளவிற்கு படிப்படியாக உயர்ந்துள்ளது.
பூண்டு அரை கிலோ மொத்த விற்பனை கடைகளில் 300 ரூபாய்க்கும் சில்லறை விற்பனையில் 350 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கோடை வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில் எலுமிச்சைக்கான தேவை அதிகரிப்பின் காரணமாக மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ எலுமிச்சை 130 முதல் 150 ரூபாய்க்கும் சில்லறை விற்பனையில் 200 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதர காய்கறிகளான கேரட் பீட்ரூட் முள்ளங்கி உருளைக்கிழங்கு கத்திரிக்காய் போன்ற காய்கறிகளின் விளையும் 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.