கரூரில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் வைகாசி பெருவிழாவையொட்டி நடைபெற்ற கம்பம் வழங்கும் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
கரூர் மாவட்டத்தில் உள்ள பிரசித்திப் பெற்ற ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் வைகாசி பெருவிழா இன்று கோலாகலமாக தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வாக நடைபெற்ற கம்பம் வழங்கும் விழாவில் கம்பத்திற்கு தண்ணீர், பால் ஊற்றி, மஞ்சள், குங்குமமிட்டு பக்தர்கள் வழிபட்டனர்.
இதனைத் தொடர்ந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட கம்பத்தை வழிநெடுகே நின்று பக்தர்கள் தரிசித்தனர்.