விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே முன் விரோதம் காரணமாக கூலித் தொழிலாளி வெட்டி கொலை செய்யப்பட்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இடையன் குளத்தை சேர்ந்த ஞானசேகர் நடத்தி வந்த செங்கல் சூளையில், முருகராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார்.
பின்னர் வேறு செங்கல் சூளைக்கு அவர் வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் தான் வளர்த்த புறாக்களை காணாதது தொடர்பான முன்விரோதத்தில், முருகராஜ் தனது நண்பர்களுடன் சேர்ந்து, கூலித் தொழிலாளி ஞானசேகரை வெட்டிக் கொன்றுள்ளார்.
இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், முருகராஜ் உள்பட மூவரை தேடி வருகின்றனர்.