ராமநாதபுரத்தில் நடைபெற்ற முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்வில் ஆசிரியர்களுக்கு, பதநீர் வழங்கிய மாணவர்களின் செயல் காண்போரை கவர்ந்தது.
சாயல்குடி அருகேயுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 25 ஆண்டுகளுக்கு முன் பயின்ற மாணவர்களின் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது.
இதில் பங்கேற்ற மாணவர்கள் கடந்த கால நிகழ்வுகளை மகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தனர். பின்னர் இயற்கை உணவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆசிரியர்களுக்கு பனை ஓலையில் பதநீர் வழங்கியது காண்போரை கவர்ந்தது.