அடுத்த ஆண்டுக்குள் ஜப்பானை பின்னுக்குத் தள்ளி, உலக அளவில் 4-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா முன்னேறும் என நிதி ஆயோக் அமைப்பின் முன்னாள் சிஇஓ அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார்.
உலக பொருளாதாரத்தில் அமெரிக்கா, சீனா, ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு அடுத்ததாக இந்தியா 5-ஆவது இடம் வகிக்கிறது.
கடந்த 2022-இல் பிரிட்டனை பின்னுக்குத் தள்ளி 5-ஆம் இடத்துக்கு முன்னேறிய இந்தியா, இதே வீதத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியைப் பதிவு செய்தால், 2025-க்குள் 4-ஆவது இடத்துக்கு முன்னேற வாய்ப்பு உள்ளதாக நிதி ஆயோக் அமைப்பின் முன்னாள் சிஇஓ அமிதாப் காந்த் கணித்துள்ளார்.