ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம்கீர் ஆலமின் உதவியாளர் சஞ்சீவ் லால் வீட்டின் பணிப்பெண் இல்லத்திலிருந்து லட்சக்கணக்கான ரூபாய் பணம் அண்மையில் கைப்பற்றப்பட்டது.
இந்தப் பணத்துக்கும், அமைச்சர் ஆலம்கீருக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படும் நிலையில், விசாரணைக்கு ஆஜராகுமாறு அமைச்சருக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.
அதன்படி, மே 14-ஆம் தேதி ராஞ்சி அமலாக்கத் துறை மண்டல அலுவலகத்தில் அமைச்சர் ஆலம்கீர் ஆலமின் விசாரணைக்கு ஆஜராக உள்ளார்.