கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் கெலவரப்பள்ளி அணையில் வெளியேற்றப்படும் நீர் விவசாய நிலத்தில் தேங்குவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கர்நாடகம் மற்றும் ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருவதால் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
தற்போது அணைப்பகுதியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் அணைக்கு வரும் நீர் முழுவதும் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நீர் விவசாய நிலத்தில் தேங்குவதால் விளைபொருட்கள் பாழடைந்து லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.