ஆந்திராவில் வாக்காளரை கன்னத்தில் அறைந்த எம்எல்ஏ- வை வாக்காளர் திருப்பி அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெனாலி சட்டமன்ற தொகுதியில் இன்று 4-ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது வாக்களிக்க வரிசையில் வராத ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்எல்ஏ சிவக்குமாரை வாக்காளர் ஒருவர் தட்டிக் கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சிவக்குமார்,அவரின் கன்னத்தில் அறைந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த வாக்காளர் சற்றும் யோசிக்காமல் எம்.எல்.ஏ- வை திருப்பி அறைந்தார்.