அரியலூர் மாவட்டம், மேலக்குடியிருப்பு திரவுபதி அம்மன் கோயிலில் நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கோயில் பூசாரி வழக்கம் போல் காலை கோயிலை திறந்த போது, அம்மன் கழுத்தில் இருந்த தாலி செயின் உள்ளிட்ட 17 சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்கள் மாயமானது தெரியவந்தது.
இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.