திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள பிரபல துணிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டது. மேற்கு ரதவீதியில் கதிரேசன் என்பவருக்கு சொந்தமான ஜவுளிக்கடை ஒன்று இயங்கி வருகிறது.
மூன்று தளங்கள் கொண்ட இந்த நிறுவனத்தின் தரைத்தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கு இருந்த ஜவுளி பொருள்கள் முற்றிலும் எரிந்து சேதமானது.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீணை அணைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.