உலகில் முதன்முறையாக பன்றியின் மரபணு மாற்றப்பட்ட சிறுநீரகம் பொருத்தப்பட்ட நபர், 2 மாதங்களில் உயிரிழந்துள்ளார்.
62 வயதான ரிச்சர்ட் ரிக் ஸ்லேமேன் என்ற நபருக்கு அமெரிக்காவின் massachusetts மருத்துவமனையில், கடந்த மார்ச் மாதம் பன்றியின் மரபணு மாற்றப்பட்ட சிறுநீரகம் பொருத்தப்பட்டது.
நான்கு மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பின் பன்றியின் சிறுநீரகம் ரிச்சர்டிற்கு பொருத்தப்பட்டது.
மருத்துவமனையின் கண்காணிப்பின் கீழ் இருந்த அவர், கடந்த ஏப்ரல் மாதம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இந்த சிறுநீரகம் குறைந்தபட்சம் 2 ஆண்டுகளாவது வேலை செய்யும் என்று மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், ரிச்சர்ட் ரிக் ஸ்லேமேன் உயிரிழந்துவிட்டதாக, மருத்துவர்களும், அவரது குடும்பத்தினரும் தெரிவித்துள்ளனர்.
எனினும், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை காரணமாகவே ஸ்லேமேன் இறந்தார் என்பதற்கான அறிகுறி இல்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.