புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அடுத்த கொத்தமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா கோலாகலமாக நடைபெற்றது.
திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றது. அப்போது பெண்கள் மல்லி, முல்லை, வேப்பிலை உள்ளிட்டவற்றை தலையில் சுமந்து வந்து அம்மனின் முன்பாக கொட்டி வழிபட்டனர்.
அம்மன் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.