மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் திருவிக்கிரமநாராயண பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
முன்னதாக ஸ்ரீதேவி பூதேவி சமேத திருவிக்கிரம நாராயணப் பெருமாளுக்கு திருமஞ்சணம், சாத்துமுறை அரங்கேறியது.
தொடர்ந்து, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு உற்சவ கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.