மும்பை, தானே மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென புழுதி புயல் தாக்கியதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
மஹாராஷ்டிரா மாநிலத்தில் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், இன்று தானே, ரத்னகிரி, பாலகர் பகுதியில் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், மும்பை, தானே சுற்றுவட்டாரத்தில் மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய காற்றால், புழுதி புயல் உருவானது. இதனால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். எனினும், ஓரிரு இடங்களில் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.