கரூரில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பள்ளி படிப்பு முடித்த மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சியினை கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்.
பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவ மாணவியர்கள் உயர்கல்விப்படிப்பில் சிறந்து விளங்க தமிழக அரசு சார்பில் நான் முதல்வன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கரூரில் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற நான் முதல்வன் திட்டம் வழிகாட்டு நிகழ்வில் குறைவான அளவிலேயே மாணவ மாணவிகள் கலந்து கொண்டதால், பெரும்பாலான நாற்காலிகள் காலியாக இருந்தன.