திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் மர்ம மரணம் தொடர்பாக, ஏற்கனவே விசாரிக்கப்பட்ட 32 பேரிடமும் தேவைப்பட்டால் மீண்டும் விசாரணை நடத்தப்படும் என தென் மண்டல ஐஜி கண்ணன் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்ம மரண வழக்கு தொடர்பாக, தென் மண்டல ஐ.ஜி.கண்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
கடந்த 3-ம் தேதி ஜெயக்குமாரை காணவில்லை இரண்டு கடிதங்களுடன் புகாரளிக்கப்பட்டதாகவும், அதில் குறிப்பிடப்பட்டிருந்த 32 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
முழு உடற் கூராய்வு அறிக்கை உள்பட பல்வேறு அறிக்கைகள் வர வேண்டியுள்ளதால், 32 பேரிடமும் மீண்டும் விசாரிக்க வாய்ப்புள்ளது என தெரிவித்தார்.
மேலும், அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் வழக்கு தொடக்கத்திலேயே கொலை வழக்கு என பதிவு செய்யப்பட்டதாகவும், ஆனால், ஜெயக்குமார் வழக்கு சந்தேக மரணமாகவே பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.