யூ டியூபர் சவுக்கு சங்கரின் சர்ச்சைக்குரிய பேட்டியை ஒளிபரப்பிய ரெட் பிக்ஸ் யூ-டியூப் சேனலின் ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்ட், டெல்லியில் இருந்து ரயில் மூலமாக சென்னை அழைத்து வரப்பட்டார்.
பெண் காவல் அதிகாரிகளை அவதூறாகப் பேசியதாக கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர், குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவரது பேட்டியை ஒளிபரப்பிய யூடியூபரான பெலிக்ஸ் ஜெரால்டு மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், முன் ஜாமீன் கேட்டு, சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இதனை விசாரித்த நீதிபதி குமரேஷ்பாபு, பெலிக்ஸ் ஜெரால்டை முதல் குற்றவாளியாக சேர்த்திருக்க வேண்டும் என கருத்து கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.
இதையடுத்து, டெல்லி தனியார் தங்கும் விடுதியில் இருந்த பெலிக்ஸ் ஜெரால்டை தனிப்படை போலீஸார் கைது செய்து, ரயில் மூலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
அங்கிருந்து அவர் பலத்த பாதுகாப்புடன் திருச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.