தருமபுரி மாவட்டம், ஓசூர் அருகே மென்பொறியாளர் வீட்டில் 75 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திகிரி அருகே உள்ள ராயல் ஆர்கேட் குடியிருப்பில் வசிக்கும் மென் பொறியாளர் சதீஷ் நாகராஜன், நாமகிரிப்பேட்டையில் நடைபெற்றதேர் திருவிழாவிற்காக குடும்பத்துடன் சென்றுள்ளார்.
இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள், வீட்டுக்குள் புகுந்து பீரோவில் வைத்திருந்த சுமார் 75 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.