ஆன்லைன் உணவு விநியோக வர்த்தக நிறுவனமான ஜொமேட்டோ 2023-24ஆம் நிதியாண்டில் 175 கோடி ரூபாய் நிகர லாபத்தை பெற்றுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
ஆனால் கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் 188 கோடி ரூபாய் நிகர இழப்பை பதிவு செய்ததாகவும் கூறியுள்ளது.
மேலும் ஒருங்கிணைந்த வருவாய் 3ஆயிரத்து 562 கோடியாகவும், இது ஆண்டுக்கு ஆண்டு 73 சதவீதம் அதிகரித்து வருவதாகவும் ஜொமேட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது.