பீகார் மாநிலம் பாட்னாவில், மேடையில் நின்ற ராஷ்டிர ஜனதா தளக் கட்சி தொண்டரை, லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜ் பிரதாப் யாதவ் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மக்களவைத் தேர்தலையொட்டி, பாட்னா தொகுதியில் லாலு பிரசாத் யாதவின் மகள் மிசா பார்தி வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு தொண்டர்களை சந்தித்தார்.
அப்போது மேடையில் நின்ற தொண்டரை, திடீரென அவரது சகோதரர் தேஜ் பிரதாப் யாதவ் ஆவேசமாக தாக்கி, கீழே தள்ளிவிட்டதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
இந்தக் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.