இமயம் முதல் குமரி வரை பாரதம் என்பது ஒன்றுதான் என RSS அமைப்பின் அறிவுசார் பிரிவு அகில இந்திய தலைவர் ஜெ. நந்தகுமார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில்,
வேத காலம், புராணங்கள், இடைக்கால இதிகாசம், இலக்கியம் என அனைத்திலும் இமயம் முதல் குமரி வரை பாரதம் என்பது ஒன்றுதான் என்பதற்கு ஏராளமான சான்றுகள் காணக் கிடைக்கின்றன என்றார்.
மேலும், இதற்கு வலுசேர்க்கும் விதமாக அம்பேத்கர் உரையாற்றி இருப்பதாகக் கூறிய அவர், இந்தியாவில் சிலர் அற்பத்தனமான அரசியலுக்காக பிரிவினையைத் தூண்டுவதாகவும், ஏற்கெனவே கொலம்பியா பல்கலைக்கழகத்தில் தாங்கள் தாக்கல் செய்த ஆய்வுக் கட்டுரையில் இதை சுட்டிக் காட்டியிருப்பதாகவும் தெரிவித்தார்.
பாரதத்துக்கு எதிரான சிந்தனை கொண்ட ஒரு சிலர், ஆங்கிலேயர்கள் முன்மொழிந்த பிரிவினை சித்தாந்தத்தை வெட்கமே இல்லாமல் பின்பற்றுவதாகவும் நந்தகுமார் விமர்சித்துள்ளார்.