திருப்பத்தூரில் ஹஜ் யாத்திரைக்கு செல்லும் நபர்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் தொடக்கி வைத்தார்.
ஹஜ் யாத்திரைக்கு புறப்பட தயாராக இருந்த 329 பேருக்கும், யாத்திரையின் போது மூளை சம்பந்தமான நோய் தொற்று ஏற்படாத வண்ணம் ஓபிவி எனப்படும் சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.
சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த முகாமை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் துவக்கி வைத்தார். இந்த முகாமில் சுகாதாரத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.