நாடாளுமன்ற தேர்தலின் முதல் இரண்டு கட்டங்களில் பதிவான வாக்குகளின் விவரம் தாமதமாக வெளியிடப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு வரும் 17-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில், முதல் மற்றும் 2-ஆம் கட்ட தேர்தலின் வாக்கு விவரங்களை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தாமதமாக வெளியிட்டதாகவும் வாக்கு சதவீதத்தில் முரண்பாடு இருப்பதாகவும் ஒருவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.