இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு வரும் 27-ஆம் தேதி வரை விண்ணப்பங்களை அனுப்பலாம் என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
தற்போதைய தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் வரும் ஜூன் மாதத்துடன் நிறைவடையும் நிலையில், புதிய பயிற்சியாளரை தேர்ந்தெடுக்கும் பணிகளை கிரிக்கெட் வாரியம் தொடங்கியுள்ளது.
இந்த பதவியில் நியமிக்கப்படுபவர் ஜூலை 1-ஆம் தேதி பொறுப்பேற்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.