அடுத்த ஜென்மத்தில் நல்ல பாம்பாக பிறந்தால் கூட படம் எடுக்க மாட்டேன் என்றும், அது ரொம்ப கஷ்டமான வேலை என்றும் நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
தலைமை செயலகம் என்கிற பெயரில் உருவாகியுள்ள வெப் தொடரில் நடிகர்கள் பரத், சரத்குமார், நிரூப், ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்நிலையில், சென்னை, வடபழனியில் படக்குழுவினரின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய சரத்குமார் , படம் எடுப்பது கஷ்டமான வேலை என்றும், கடின உழைப்பால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்றார்.