கரூர் வைஸ்யா வங்கியின் நிகர லாபம் 45 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக நிதிநிலை அறிக்கையின் முடிவில் தெரியவந்துள்ளது.
கரூர் வைஸ்யா வங்கி, கடந்த மார்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த 4-வது காலாண்டு மற்றும் ஆண்டு முடிவு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டது.
அதன்படி வங்கியின் நிகர லாபம் அதிகபட்ச அளவாக ஆயிரத்து 605 கோடியை ஈட்டியுள்ளது. மேலும், வங்கியின் முன் ஒதுக்கீடு செயல்பாடு லாபம் 2 ஆயிரத்து 476 கோடியாக இருந்த நிலையில் இது தற்போது 14 புள்ளி 3 சதவிகிதம் அதிகரித்து 2 ஆயிரத்து 829 கோடியாக உள்ளது.