கிரிக்கெட் வீரார் தோனியைக் காண டெல்லியிலிருந்து சைக்கிளில் சென்னை சேப்பக்கம் வந்த ரசிகரின் செயல் வியப்படைய வைத்துள்ளது.
17-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் தோனியை நேரில் காண்பதற்காக டெல்லியைச் சேர்ந்த கௌரவ் என்பவர் சைக்கிள் மூலம் சென்னை வந்தடைந்தார்.
23 நாட்களாக இவர் பயணித்த நிலையில் சேப்பாக்கம் மைதானம் முன்பு முகாம் அமைத்து தங்கினார்.
அப்போது பேசிய அவர் தோனியை நேரில் சந்தித்து ஆட்டோகிராப் வாங்க வேண்டும் என்பது நீண்ட நாள் கனவாக உள்ளது என தெரிவித்தார்.