“நாடு முழுவதும் மோடி அலை வீசி வருகிறது” என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
லடாக்கில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,
“பலமான மோடி அலை வீசுவதால், கடந்த 2019-ம் ஆண்டு வெற்றி பெற்றதைவிட, இந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிக அளவு இடங்களை பாஜக பெறும்” என நம்பிக்கை தெரிவித்தார்.
கெஜ்ரிவால் பிராச்சாரம் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்விக்கு பதிலளித்த கிரண் ரிஜிஜூ , “அரவிந்த் கெஜ்ரிவால் இடைக்கால ஜாமினில்தான் வெளியே வந்துள்ளதாகவும், வழக்கில் இருந்து முழுமையாக விடுதலை செய்யப்படவில்லை” என்றும் குறிப்பிட்டார்.