காங்கிரஸ் கட்சியினர் பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை அளித்து வருவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தால் ஏழைப் பெண்களுக்கு 1 லட்சம் ரூபாய் தருவதாக ராகுல் காந்தி பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து வருகிறார் என நிதியமைச்சர் கூறியுள்ளார்.
மேலும், இந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற எத்தனை மக்கள் நலத்திட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க போகிறார் எனவும் அவர் கடுமையாக சாடினார்.