புதுச்சேரியில் தனது சொந்த கிராமத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு விருந்தளித்த திருபுவனை காவல்துறை உதவி ஆய்வாளர் இளங்கோவின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருபுவனை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் இளங்கோ, சொந்தா ஊரான புதுச்சேரி அடுத்த பண்ட சோழநல்லூரில், 10 மற்றும் 12 -ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கப்பரிசு வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து பிரியாணி விருந்தும் அளிக்கப்பட்டது.