தேனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டு மணி நேரம் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
தேனி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக வரலாறு காணாத வெப்பம் நிலவியதால் மேற்கு தொடர்ச்சி மலையின் சில பகுதிகளில் காட்டுத்தீ பற்றி எரிந்து அரிய வகை மரங்கள் தீக்கிரைக்குள்ளானது.
இந்நிலையில் கடந்த ஐந்து நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மிதமான மழையும், கனமழையும் பெய்து வருகிறது.
தொடர்ந்து மதிய நேரத்தில் இரண்டு மணி நேரமாக பலத்த காற்றுடன் பெய்த மழையால் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.