உத்தரப் பிரதேசம் மாநிலம் மீரட் அருகே, கட்டணம் செலுத்த மறுத்து, சுங்கச்சாவடி பெண் ஊழியர் மீது காரை மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
டெல்லி – மீரட் அதிவிரைவுச் சாலையில் சென்ற காரை, காசி சுங்கச்சாவடியில் உள்ள பெண் ஊழியர் கட்டணம் வசூலிப்பதற்காக நிறுத்த முயன்றார்.
ஆனால் கார் ஓட்டுநர் கட்டணம் தராமல் ஊழியர் மீது வேகமாக காரை மோதிச் சென்றார். இதில் படுகாயமடைந்த சுங்கச்சாவடி ஊழியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.